வெள்ளி, 13 நவம்பர், 2009

நண்பர் வீட்டுத்திருமணம்

திருமணங்களுக்கு புகைப்படக்கலைஞராக்ப்போய் / பணிமுடித்துவருவது எவ்வளவு சுலபமானதென்று, நண்பர் சக்தி சகோதரி திருமணத்திற்கு விருந்தாளியாக உடுமலை போய்வந்தபின்தான் தெரிந்தது. அப்பப்பா…. ஞாயிறுகாலை திருமணம் சனி மதியமே அரசுவுடன் சேர்ந்து வரவேண்டுமென்று அன்புக்கட்டளை போட்டுவிட்டார், சக்தி. உறவினர் வீட்டுத்திருமணங்களுக்கே போக வாய்ப்பற்று ( காரணம் ஒன்றுமில்லை. அதே தேதியில் திருமண நிகழ்ச்சிகளுக்கு (சோறுபோடும் தொழிலே அதுதானே!) போய்விடுவதால்) இருக்கிற சூழலில் சக்தி சகோதரி திருமணம். சென்னை நண்பர்கள் வருகை. இதற்கும் மேலாக அடுத்த நாள் (ஞாயிறு) டாப்ஷிலிப் போவதாகத்திட்டம். இவ்வளவு காரணங்கள் போதாதா என்ன…? இரவு 8 மணிக்கு உடுமலை / திருமண மண்டபம் அடைந்தோம். மணப்பெண்ணுக்கு சீர்செய்து கொண்டிருந்தனர். அமர்ந்திருந்து விட்டு/ பின் இரவு உணவு முடித்து, விடுதி வந்தோம். நண்பர்களுடனான நீண்ட உரையாடலுக்குப்பின் தூக்கம். காலை 7மணிக்கு எழுந்து 8 மணிக்கு மண்டபம் செல்லத் தயாரானோம். மண்டபம் நிறைந்திருந்தது. சக்தி வரவேற்றார். மணமேடையில் மணமக்களுக்கான சம்பரதாய நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருஓரமாக அமர்ந்து நிகழ்வுகளில் மூழ்கினோம். தாலிகட்டும் நிகழ்விற்காகவே காத்திருந்த உறவினர்கள், அந்நிகழ்வு முடிந்தவுடன், எழுந்து காலை உணவிற்குச் சென்றுவிட்டனர். மணமக்கள், அய்யர்கள், கொஞ்சம் உறவினர்கள், (அதென்னவோ தெரியவில்லை. எல்லாத்திருமணங்களிலும் இப்படித்தான், ஏதோ உணவிற்காகவே வந்தவர்கள் போல / எப்படா மாப்பிள்ளை தாலிகட்டுவாரென்று காத்திருந்து / கட்டிமுடித்தவுடன் வரிசை போட்டு / அன்னதானத்திற்கு போனவ்ர்கள் போல்முட்டிமோதி / இலை பிடித்து உணவுமுடித்து திரும்புவர். தப்பில்லை. வேகமான உலகில் அவரவர்களுக்கு எத்தனையெத்தனை வேலைகளோ…!) எல்லாத்தையும் கண்ணுற்றபடியே அமர்ந்திருந்தோம். நீண்ட இடைவெளிக்குப்பின் காலைஉணவு முடி்த்து வெளிவந்தோம். விடுதி திரும்ப எத்தனித்தபோது சக்தி வந்து, போட்டோ எடுததுட்டு போகலாம் என்க…. மறுபடியும் இருக்கைக்கு வ்நதோம். மணமக்களுக்கான நீ…ண்…ட… சம்பரதாய சீர்களெல்லாம் முடிந்து/ அவர்கள் உணவு முடித்துத்திரும்பும் போது நேரம் நிறைய கடந்திருந்தது. குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மணமக்களிடம் அறிமுகப்படுத்திவைத்தார், சக்தி. எல்லா சம்பரதாயங்களும் முடித்து விடுதிவந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட 12மணிக்கு சுரேஷ்வரன் வந்துசேர்ந்தார். வரும்போது அரசியல்வாதிபோல ஒருவரை அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார். பெயர் சோமு என்றார். கிராமத்து மண்மணம் கமல இரண்டுகைகளையும் கூப்பி வணங்கி, அமர்ந்தார், சோமு என்கிற அந்த வெள்ளைச்சட்டை மனிதர். சாதாரணமான ஒரு அறிமுகமாகத்தான் இருந்தது. இயற்கை விரும்பி, தமிழ்பற்றாளர், இயற்கைவிவசாயம் செய்வதற்காகவே 30 ஏக்கர் நிலத்தை / உடுமலைக்கும் பொள்ளாச்சிக்கும் இடைபட்ட பகுதியில் மலையொட்டிய பகுதியில் வாங்கி/ ஐந்திணை இயற்கை அமைப்பு என்ற ஒன்றை துவங்கவுள்ளார். இன்றிரவு அவரது தோட்டத்தில் தான் நாம் தங்கப்போகிறோம்.. என சுரேஷ் சொன்னபோது…. அப்ப டாப்ஷிலிப்? என்றேன். 5 நபர்களுக்குமேல் அங்கு இரவு தங்குவதற்கான வாய்ப்பு இல்லை.(நாங்கள் 12 பேர் இருந்தோம்) எனவே இரவு இங்குதங்கிவிட்டு காலை டாப்ஷிலிப் போகலாம், என்றார். சோமு வணங்கி விடைபெற்றார். மதிய உணவிற்கு மறுபடியும் மண்டபம். (உறவினர்கள் கூட மூன்றுநேர உணவிற்கு தங்கியிருக்கமாட்டார்கள்.சரி நண்பர் வீட்டுத்திருமணம்தானே) உணவுமுடித்து திருநாவுக்கரசு, சுரேஷ்வரன், சக்தி, செந்தில், மைக்கேல், பைசல், ஜெய், விக்ரம், பிரதீப், அருண், மற்றும் சக்தியின் இன்னொரு நண்பர் சகிதமாக… மூன்று மகிழுந்துகளில் புறப்படத்தயாரானோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக