நண்பர் ஒருமுறை சொன்னார், ‘முட்டாள்கள் புத்தகம் வாங்குகிறார்கள், அறிவாளிகள் அதைப்(பயன்படுத்தி) படிக்கிறார்கள்.’ என்று. பெரியபெரிய (பக்கங்களில் தான்) புத்தகங்கள் வாங்குவேன். ஆனால் படிக்கநேரம் இருக்காது. ( சரிதான் நான் முட்டாள் தான்….. நண்பர் சொன்னபடி) பாலமுருகன் பரிந்துரைத்ததற்காக (எனக்கும் வாசிக்க ஆசைதான்) பிராய்டின் பெரிய புத்தகம் ஒன்று வாங்கிவந்தேன். அதிருக்கும் 2 வருடம். நீண்டநாட்கள் அலமாரியை மட்டுமே அலங்கரிக்க நண்பர் செந்தில்தான் அதை வாங்கிப்போய்(மேலே சொன்ன தத்துவத்தைச்சொன்னதும் அவர்தான்) முழுமையாக படித்துவிட்டு ஒருசிலவாரங்களில் திருப்பியும் கொடுத்துவிட்டார்.. ( இவ்வளவு வேகமாக படித்து மண்டையில் ஏறுமா என்று எனக்கு எப்பவுமே ஒரு சந்தேகமுண்டு. நண்பரிடமும் கேட்டிருக்கிறேன்.) அதேபோல்… சேகுவேராவின் வாழ்வும் மரணமும். அதுவும் அங்கங்கே கொஞ்சம் படித்ததுடன் சரி. அதையும்கூட செந்தில்தான் முழுமையாகப் படித்துவிட்டுக்கொடுத்தார். (மறக்காமல் அப்போதும் மேற்கண்ட தத்துவத்தை உதிர்த்துவிட்டுத்தான் போனார்) இப்படித்தான்… புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பு (இப்போது சரவணன்), நிழல் வெளியீடான மாண்டோவின் படைப்புகள் (நல்லவேளை இதை முழுமையாக நாண் படித்தேன்) குடியரசு தொகுப்பு (பெ.தி.க) உலகசினிமா (எஸ்.ராமகிருஷ்ணன்) இப்படி நிறைய புத்தகங்களின் வாயிலாக முட்டாளாகவே (நண்பரின் கூற்றுப்படி) இருந்திருக்கிறேன். பரவாயில்லை. சில (அல்லது பல) முட்டாள்கள் பல அறிவாளிகளை உருவாக்கினால் மகிழ்ச்சிதானே…! இரண்டு அலமாறி முழுக்க புத்தகங்கள். குறைவாகத்தான் படித்திருக்கிறேன். தேவைகருதி(நேரமும்தான்)மட்டுமே படிக்கமுடிகிறது. ஆனாலும்கூட வாய்ப்புக்கிடைக்கும் போது படிக்கமுயல்கிறேன். தொலைக்காட்சியும் / வீட்டுச்சூழலும் உண்மையிலேயே படிப்பதற்கான அநேகநிமிடங்களைச் சாப்பிட்டுவிடுகின்றன. ஓரளவிற்கு சிற்றிதழ்கள் தொடர்பு இருப்பதால் நிறைய வாசிப்பிற்கு வாய்ப்புக் கிடைத்துவிடுகின்றன. இப்பவெல்லாம் இணையம் வந்தபின் இணையத்தில் படிக்கத்தான் பிடிக்கிறது. என்ன பண்ண..? நம்மைவிட அவை நம்மைச்சூழ்ந்துவிடுகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக