இரண்டு நாட்களுக்குமுன் மாவட்ட ஆட்சியரிம் மனுக்கொடுப்பதற்காக/ வந்து புகைப்படம் எடுக்கவேண்டுமென்று கடைக்குவந்த வயதான தம்பதியரில் அந்தபெண்ணும் ஒருவர். (ஆட்சியர் அலுவலகம் எதிரில் தான் எமது புகைப்பட நிலையம்) மூன்று குழந்தைகளில் இரண்டு ஆண், ஒன்று பெண் குழந்தைகள். ஒன்று 10சதவீத மனநலம்பாதிப்பும், பாக்கி இரண்டு 30 சதவீத மனநல பாதிப்புக்கும் ஆளான குழந்தைகள். புகைப்படம் எடுத்துவிட்டு / ‘குழந்தைகளுக்கு என்ன ஆச்சு?’ என்று கேட்டதற்கு அந்தம்மா கூறிய வார்த்தைகள் தான் மேற்சொன்னவை. கண்களில் கண்ணீர்மல்க… “ஏங்க! கலெக்ட்ர்கிட்ட மனுகொடுத்தா ஏதாவது உதவுவாருங்களா? “
“முயற்சிபண்ணிப்பாருங்க. அவசியம் உதவுவார்.”
“என்ன பண்ணுவன்னே தெரியலே.. எனக்கும் வயசாயிகிட்டே இருக்கு. எனக்குப் பின்னாடி இதுகளை யார் காப்பாத்தப்போறாங்களோ….”
புகைப்படம் பெற்றுக்கொண்டு தான் இரண்டுகுழந்தைகளையும், தன்கணவனிடம் ஒருகுழந்தையையும் கொடுத்து…. சென்றார்கள்.
என்ன குற்றம்புரிந்தன குழந்தைகள். ஒரே குடும்பத்தில்… மூன்று குழந்தைகளும் இப்படி மனநலம்பாதித்தவைகளாக… நினைக்க நினைக்க மனம் இறுக்கத்தில் ஆழ்ந்தது. கடவுளின் படைப்பு என்றோ… தலைவிதியென்றோ பூர்வஜென்ம பாவமென்றோ இதை சொல்லி தப்பிக்கமுடியுமாவென்று தெரியவி்ல்லை. முன்னேறாத சமூகத்தின் / படிப்பறிவற்ற சமூகத்தின் எச்சமாகவே இருக்கிறது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, சூத்திரமக்களின் அறியாமையின் பிறப்பிது. மனிதர்களின் மீதே அக்கறையற்ற இந்த மக்களாட்சி மன்னர்கள், இப்படியான குழந்தைகளின் மீதா கவனம் செலுத்தப்போகிறார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக