மருத்துவர் சண்முகநாதன் பரிந்துரைசெய்தார் என்பதற்காகத்தான அந்த கண் மருத்துவரைக் காணச்சென்றேன். கோவை போகும் வழியில் காரணம்பேட்டை தான் அவர் மருத்துவமனை வைத்திருக்கும் பகுதி. பழனியப்பன் அவர் பெயர். என்மகனுக்கு சளி, தலைவலி தொடர்ந்து இருந்ததனால் / எதற்கும் கண் மருத்தவரிடம் சென்று காட்டிவிட்டு வாருங்களேன் என்ற சண்முகநாதனின் ஆலோசனையின் பேரிலேயே சென்றேன். அழைப்பு மணி அடித்தவுடன் ( வீடே மருத்துவமனை. அந்த பகுதிக்கு அதுவே போதும்) வந்தவர், மருத்துவரின் தந்தைபோலிருந்தார். (வயதும், தோற்றமும் அப்படி) காத்திருங்கள் என்றார்.காத்திருந்தோம். நான், மனைவி, மகன் மூவரும்.சிறிதுநேரத்தில் கைலியுடன்/ மேல்சட்டை அணிந்து( போலீஸ் தொப்பையுடன்) அவரே வந்தார். என்ன எனறார். கண் பரிசோதனை செய்யவேண்டும் என்றேன். உளளே வாருங்கள் என்றார்.( அவர் தான் மருத்துவர்) கம்பிக்கேட்டைத் திறந்து/ உள்ளே இருந்த மரக்கதவைத்திறந்து வாருங்கள் என்றார். உள்ளே சென்று அமர்ந்தோம். மகன் அவர் முன் அமர, இரண்டுமூன்று கருவிகளை வைத்து சோதித்தார். சில விபரங்களைக் கேட்டார். பரிசோதித்துவிட்டு, ஒன்றுமில்லை. சாதாரண சளிக்கான தலைவழிதான். பயம் வேண்டியதில்லை என்றார். மகன் இடம்பெயர, எனக்கும் பரிசோதிக்க வேண்டும். ஒன்றுமில்லை. வந்ததனால் பரிசோதித்துக் கொள்ளலாம் என்றுதான் / என்றேன் நான். தனக்கு அருகிலுள்ள இருக்கையில் அமரச்சொல்லி அதே போல் இரண்டுமூன்று கருவிகள் மூலம் பரிசோதித்தார். பரிசோதனையின் இடையிலேயே, எங்கிருந்து வருகிறீர்கள், என்ன தொழில் செய்கிறீர்கள் என்றெல்லாம் விசாரித்துக்கொண்டார். திருப்பூரிலிருந்து வருகிறேன், புகைப்பட நிலையம் வைத்திருக்கிறேன் என்றெலலாம் கூறினேன். (சோசியகாரர்கள் சாதகம்பார்க்கும்போது நம்மைப்பற்றிய எல்லாவிபரங்களையும் நம்மிடமே கேட்டறிந்து / அதிலிருந்தே நமக்கு பலன் சொல்வார்களே... அப்படி) சரியென கேட்டுக்கொண்டே இருந்தவர், ஒரு சொட்டு மருந்து கண்களில் விடுகிறேன். சிறிது படுத்திருங்கள். பின் கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளலாம் என்றுகூறி, படுக்க வைத்து சொட்டை கண்களில் விட்டுவிட்டு மறுபடியும் வீட்டுக்குள் சென்றுவிட்டார். அரைமணிநேரத்தில் நல்ல தூக்கம். திரும்ப வந்து அவர் எழுப்பியபோதுதான் எழுந்தேன். மீண்டும் அறைக்குள் கூட்டிப்போனார். அருகில் உட்காரவைத்து, ஒருகருவியுடன் மிகநெருக்கமாக வந்து கண்களைப்பரிசோதித்தார் ( காதலன் காதலியை இறுக்க அணைத்து முத்தமிட நெருங்வானே...அப்படி நெருக்கமாக) எனக்கே ஒருமாதியாகிப்போனது. அதற்கிடையில் புகைபிடித்திருப்பார் போல் தோன்றியது. நாற்றம் தொண்டைவரை ஒமட்டியது. தம்கட்டி அமர்ந்திருந்தேன். கண்களுக்கருகில் வந்தார். விழிகளின் வட்டதை தன்கையிலுள்ள கருவியால் / சுற்றினார். பரிசோதித்து முடித்து உங்களுக்கு ஒன்றுமில்லை என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கான சில சந்தேகங்கள் இருந்தன. கேட்டேன். பதிலலித்தார். தொகை எவ்வளவுங்க என்றேன்.(அப்போதுதான் மயங்கிவிழுந்தேன்) நானூறு ரூபாய் என்றார். மனைவியைப்பார்த்தேன். மிரட்சியோடு அமர்ந்திருந்தாள். மகன் அதற்கு மேல் இரு்நதான். எதுவும் பேசாது தொகை கொடுத்துவிட்டு, வெளியேறினேன். மனைவியும், மகனும் திட்டித்தீர்த்தார்கள். என்னங்க இது... அரவிந்துக்கு போயிருந்தாக்கூட இருநூறு ரூபாயுக்கு மேல போயிருக்காதே... கால்மூட்டை அரிசி எடுத்திருக்கலாம். அங்கலாய்த்துக் கொண்டே வந்தனர். எனக்குமே வருத்தம் மேலோங்கியது. ஏமாந்து விட்டோமோ..? ஏமாற்றிவிட்டாரோ..? பெரியபெரிய நகரங்களில்கூட இவ்வளவு தொகை வாங்குவார்களா என்றுதெரியவில்லை. இந்த சின்ன கிராமத்தில்... நினைக்க நினைக்க மனம் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. ஒருவேளை நாம் நம்மைப்பற்றி உண்மையைக் கூறியிருக்கக்கூடாதோ... நல்ல ஆடைகள் அணிந்துசென்றிருக்கக்கூடாதோ..? கிழிந்த துணியுடனோ, கைலியுடனோ போயிருந்தால் வேறுமாதிரியாக இருந்திருக்குமோ..? நடுத்தரவர்க்கத்தைவிட குறைவான நமக்கே இப்படியென்றால் நம்மைவிட பொருளாதாரத்தில் குறைவானவர்களின் கதி என்னவாகும்...? இப்படியான மோசடிப்பேர்வழிகளை என்ன செய்ய? கொள்ளையடிப்பவ்ன்களை எப்படி வெளிப்படுத்த...? ஒன்றும் விலங்கவில்லை. மருத்துவம் இவ்வளவு விலையுயர்ந்த விசயமா..?அலோபதி மருத்துவப்பக்கமே போகாததால் ( இயற்கை, மாற்றுமருத்துவம் மட்டுமே பார்க்கிறேன்) எனக்கு புதிதாகத் தெரிகிறதா என்றும் தெரிவில்லை. எதுஎப்படியோ... இந்தக் கொள்ளைகளை மடடும் ஜீரணிக்கவே முடியாது தவித்தேன். என்ன பண்ண முடியும் நம்மால்...? இப்படி வலைப்பக்கங்களில் எழுதி, மனஆறுதல் பட்டுக்கொள்வதைத்தவிர.....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக