காதல் கொள் கனவில் கிட
சினிமா சுற்று மெல்லப்பற
கோவில் திரி ஐஸ்கிரீம் தின்னு
நீயில்லாத வாழ்க்கை சூன்யம்
தத்துவம் பேசு...பரிதாபம் தேடு.... தினம் காதல்
கல்யாணம் தள்ளிப்போடு மீண்டும்
மீண்டும் சுற்றித்திரி...
பரிசுப்பொருளைப் பரிமாறிக்கொண்டு
தினவுதீர் அவேளாடு....
காதல் என்பது தெய்வீகமாகும்..அது
பசியைத் தின்கிற நெருப்பாகும்
மெளனம் பேசும் மொழிதான் உனது
மறுமொழி என்று பொய்பேசு... இப்படி
பொய்யாய்.. எகையோ... சொல்லி அவளை.... காதல்
மீண்டும்கன்னி கல்யாணம் என்றால்
புலம்பக் கற்றுக்கொள்
வாய்ப்புக் கிடைக்கும் போது மீண்டும்
அவளை அள்ளி அணை
நகை எதிர்பார்ப்பு நிறைந்திருக்கு - வீட்டின்
கெளரவம் அதிலே புதைந்திருக்கு
அம்மாவின் சொல்லை மறுப்பதற்கு
வலுவில்லை ஒரு வாய்ப்பில்லை ...என
புறக்கணித்து இன்னொரு பெண்தேடி... காதல்...
குணாவின் விருப்பத்திற்காக... எனது யாதெனில் கவிதைப்புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை பாடலாக்கிக்கொடுத்திருக்கிறேன். தான் எடுக்கப்போகும் திரைப்படத்தின் ட்ரெயிலருக்கு பயன்படுத்திக்கொள்வதாகக் கூறினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக